கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் திறந்து கிடக்கும் சாக்கடை குழி - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார்..

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் நடைபாதையில் உள்ள சாக்கடை குழி திறந்தே கிடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.


நீலகிரி: பெரும் விபத்து ஏற்படும் முன்பு நடைபாதையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழியை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள சிறிய நடைபாதையை அங்கு உள்ள பொதுமக்கள், பள்ளிகுழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் உள்ள சாக்கடைக்குழி திறந்து கிடக்கிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே சாம்சந்த் பகுதியில் பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...