ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு

தமிழகத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தல் வரும் எனவும் அப்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக-வின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் எனவும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை போக்க நீர் நிலைகளை சீரமைக்க வலியுறுத்தும் விதமாக பாரதீய நனதா கட்சியின் சார்பில் தாமரையின் தாகம் தீர்க்கும் யாத்திரை எனும் நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

அந்நிகழ்ச்சின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் இன்று கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்றது. பாஜக மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழகத்தில் அதிமுக-வுக்கு மாற்று பாஜகவே என்றார்.

அதிமுக தற்போது மூன்றாக உடைந்திருப்பதாகவும் விரைவில் அக்கட்சி சிதறும் எனவும் கூறிய அவர், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததால் சசிகலா சிறை சென்றிருப்பதாகவும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் பட்சத்தில் திமுக-வின் நிலை என்ன என்பதும் அப்போது அதிமுக-வுக்கு மாற்று யார் என்பதும் தெரியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் தங்கள் ஆட்சியின் ஊழலை மறைப்பதற்காகவே திமுக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாகவும் அதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக மீனவர்களிடம் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேபோல் தமிழகத்தில் வாட் வரி என்ற பெயரில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி பேருந்து கட்டணம் மறைமுகமாக 20 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எல்லா விதத்திலும் மக்கள் மீது சுமை ஏற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தற்போது தமிழகத்தில் சீரான மின்சாரம் கிடைப்பதற்கு மத்திய அரசின் உதை மின் திட்டமே காரணம் என மேற்கோள் காட்டிய தமிழிசை சௌந்திரராஜன் ஒரு இடம் கூட இல்லாத மணிப்பூரிலேயே பாஜக ஆட்சி அமைக்கிறது என்றால் தமிழகத்திலும் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், எப்போது வேண்டுனாலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம், அப்போது 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...