துடியலூரில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவிய திமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டு!

துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் ஒரு பகுதியான அண்ணா பிறந்தநாள் விழாவில், ஏழை கல்லூரி மாணவியின் கல்லூரி படிப்பிற்கு உதவும் வகையில் அவருக்கு தேவையான பாட புத்தகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



கோவை: துடியலூர் அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவியாக பாடப்புதகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் உள்ள திமுக மன்றத்தில் துடியலூர் பகுதி கழக திமுக சார்பில் முதல் நிகழ்வாக அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதிக் கழகச் செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.



தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரூருவப்படத்திற்கு ஒவ்வொருவராக மலர் தூவி மரியாதை செய்தனர்.



தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதி ஆண்டு படித்து வரும் துடியலூரை சேர்ந்த கூலி தொழிலாளிகளான துரைசாமி – சரஸ்வதி ஆகியோரின் மகளான சங்கீதாவிற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை கருதி திமுக இரண்டாவது வட்ட துணைசெயலாளர் தமிழ்நிதி கடந்த நான்கு ஆண்டுகளாக கல்லூரி படிப்பிற்க்கு தேவையான புத்தகங்களை வருகிறார்.

அதேபோல் இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் மாணவியின் தாயாரிடம் இறுதி ஆண்டிற்கான புத்தகங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சரஸ்வதி உள்ளிட்ட மகளிர் கலைஞரின் மகளிர் உரிமை கிடைத்துள்ளதால் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, நிர்வாகிகள் ரேவதி, ராமசாமி, ஆறுச்சாமி, அருக்காணி, மாரியப்பன், நாராயணன், சோபனா, அன்பழகன், பழனிச்சாமி, சுப்பிரமணி, கோவிந்தன், செல்வராஜ், சின்னசாமி, தனபாக்கியம், வெற்றி செல்வி, சோமசுந்தரம், பிரபாகரன், கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...