கோவை வந்தடைந்தன தித்திக்கும் மாம்பழங்கள்

மாம்பழத்தை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ! என்ற கூற்றுக்கேற்ப குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் மாம்பழம். கோடை காலத்தின் தொடக்க நேரத்தில் மாம்பழங்கள் நம் ஊர் மார்க்கெட்டுகளில் இடம்பிடிக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் அதிக வெப்ப நிலை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இங்கு தான் அதிக அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு மொத்தமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.



இம்மாவட்டங்களில் உற்பத்தியான மாம்பழங்கள் தற்போது உண்பதற்கு தயாரான நிலையில் கோவை மார்கெட்டுகளில் இறங்கியுள்ளன. இருந்த போதும் கடந்த அண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாகவும், அதனால் வியாபாரம் மந்தமான நிலையில் இருப்பதாகவும் கோவை மொத்த வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து உக்கடம் பகுதியில் பழ மண்டி வைத்திருக்கும் வியாபாரி ஷாஜகான் கூறியதாவது:-

வழக்கமாக மாம்பழ வரத்து பிப்ரவரி மாதம் தொடங்கி ஜுலை மாதம் வரை இருக்கும். இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால் மாங்காய்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 75 முதல் 80 சதவிகிதமாக இருந்த மாங்காய் வரத்து தற்போது 35 சதவிகிதமாக குறைந்துள்ளது.



வகைகள்

மாம்பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில், செந்தூரம், நீலம், பங்கனபள்ளி, நெடுஞ்சோலை, இமாம் பசந்த், ஆபூஸ், கிளிமூக்கு போன்ற ராகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. மாங்காய் வரத்து குறைவு என்பதோடு, இந்த ஆண்டு வியாபாரமும் மந்தமான நிலையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



விலை விபரம்- (கிலோ) (மொத்த வியாபாரம்)

செந்தூரம் - ரூ.60

பங்கனபள்ளி - ரூ.80

நெடுஞ்சோலை - ரூ.60

இமாம் பசந்த் - ரூ.150

ஆபூஸ் - ரூ.120

கிளிமூக்கு - ரூ.20

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....