ஒரு வார காலத்திற்குள் ரேசன் பொருட்கள் கிடைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்- தமிழிசை சவுந்தரராஜன்

ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா ஜ க மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறுகையில், தமிழகத்தில் பிரதான பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை உயர்த்தி இருப்பதால், பேருந்து கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க தமிழக அரசிடம் நிர்வாக திறமை இல்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து சென்னையில் வருகின்ற 16-ம் தேதி நடைபெறும் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கும் முன்னரே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் ஆரம்ப நிலையில் இருந்து கண்காணித்து தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும், ஒரு பலமும் இல்லாத மக்கள் நலக்கூட்டணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதற்காக அழைப்பு விடுத்தார் ?. என கேள்வி எழுப்பிய அவர், அ தி மு க விற்கு மாற்று தி மு க கிடையாது என தெரிவித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் முத்து கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனவும், வட மாநிலங்களுக்கு கல்வி பயில செல்லும் தமிழக மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

மேலும், ஒரு வார காலத்திற்குள் முறையாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை எனில் பா ஜ க மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...