சனாதன சர்ச்சை - உதயநிதி புகைப்படத்தை கிழித்தும், காலால் மிதித்தும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

சனாதனம் குறித்து விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அவரது புகைப்படத்தை கிழித்தும், காலால் மிதித்தும் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், அங்கிருந்த போலீசார் பாஜகவினரை கைது செய்தனர்.



கோவை: சனாதனம் குறித்து விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை கிழித்தும், காலால் உதைத்தும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அயோத்தியை சேர்ந்த பரமாஹன்ஷ ஆச்சாரியார் என்ற சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

மேலும், சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் "சனாதனம்" என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.



இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மகளிர் அணியினர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கலந்துகொண்டனர்.



கண்டிக்கின்றோம் என்ற வாசகங்களுடன் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கலந்து கொண்ட அவர்கள், ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் புகைபடத்தை காலில் போட்டு மிதித்தும், கிழித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.



அப்போது காவல் துறையினர் தடுக்க முயன்ற போது, பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல் துறைக்கு எதிராக பா.ஜ.கவினர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.



இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...