உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சிகளுடனான அலோசனைக் கூட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று (மார்ச் 14) மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி மையங்களுக்கான பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்து வரைவு வாக்குச்சாவடி நிலையங்களுக்கான பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் அவரவர் அருகில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் வகையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1197 வாக்குச்சாவடி மையயங்களிளும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகளில் உள்ள 90 வார்டுகளுக்கு 227 வாக்குச்சாவடி மையங்களும், 37 பேரூராட்சிகளில் உள்ள 585 வார்டுகளுக்கு 742 மையங்களிலும், 228 கிராம ஊராட்சிகளில் 2034 வார்டுகளுக்கு 1485 மையங்களிளும் என கோவை மாவட்டத்தில் மொத்தம் 2809 வார்டுகளுக்கு 3651 வாக்குபதிவு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட வாக்குப்பதிவு மையங்கள் மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தகவல் மற்றும் விளக்கங்கள் தெரிவிக்க விரும்பினால் வரும் 20.03.2017 அன்றுக்குள் தங்கள் பகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்திடவும் மற்றும் வாக்காளர் பட்டியல் விபரம் குறித்து தங்கள் பகுதியிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பி.ஹெச்.முருகன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...