பொருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது அவினாசிலிங்கம் பல்கலை., பேராசிரியர் காந்திமதிக்கு வழங்கப்பட்டது



மால்கம் எலிசபத் ஆதிசேஸ்ய்யா நிறுவன குழு 1994-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பொருளியல் நன்கு கற்பிப்போரையும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வோரையும் ஊக்கப்படுத்துவதாகும். அதன் அடிப்படையில் வருடந்தோறும் பெருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டும் இன்று பொருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது தொடர்பான நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 17 பேர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து பங்கேற்றனர்.

அதில் பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கு தனித்தனியாக ஒரு விருது அளிக்கப்பட்டது. அதற்கான விருதளிக்கும் விழா இன்று அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

அதில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் பொருளியியல் துறை இணை பேராசிரியர் காந்திமதிக்கு பல்கலைக் கழகங்களுக்கான விருது வழங்கப்பட்டது. இதனை மால்கம் ஆதிசேஸ்ய்யா குழு உறுப்பினர் மற்றும் பொருளியியல் அளவியல் துறையின் இணை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் இவ்விருத்திற்கான சான்றிதழையும் முப்பது ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வழங்கி சிறப்பித்தார்.



இவ்விழாவில், பொருளியியல் துறை தலைவர் கீதா வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரை ஆற்றினார். 

இதில், பல்கலைக்கழக பதிவாளர் கெளசல்யா, முன்னாள் கலையில் புல முதன்மையர் ராமதிலகம், கலைப்புல முதன்மையர் அம்பிகாதேவி, ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...