மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான இடங்கள் ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 3 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 65.04 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுவரை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலிருந்து கடந்த 2016 நவம்பர் மாதம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.64.70 கோடி மதிப்பிலான 5.34 ஏக்கர் அளவிலான இடங்களும், டிசம்பர் மாதம் சுமார் ரூ.55.45 கோடி மதிப்பிலான 3.77 ஏக்கர் அளவிலான இடங்களும் மற்றும் 2017 ஜனவரி மாதம் சுமார் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் அளவிலான இடங்களும், பிப்ரவரி மாதம் சுமார் ரூ.71.95 கோடி மதிப்பிலான 7.66 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், மீட்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைத்தல், தோட்டங்கள் அமைத்தல், மரம் செடிகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 11ம் தேதியன்று மட்டும் மாநகராட்சியிலுள்ள மூன்று மண்டலங்களான மேற்கு, வடக்கு மற்றும் மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 65.04 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-17யில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 27.04 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், சரவணம்பட்டி, வார்டு-28யில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 38 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் மத்திய மண்டலம், சித்தாபுதூர், சின்னசாமி ரோடு வார்டு-52 யில் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, காந்திபுரம், வார்டு-72, டாக்டர்.நஞ்சப்பா நகரில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நடைபாதை கடைகளை அகற்றப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 65.04 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...