ஒரே நாளில் அதிகப்படியான அபராதம் வசூலித்து சேலம் தெற்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் சாதனை

சமீபகாலமாக ரயில் பயணத்தின் போது பெரும்பாலான பயணிகள் பயணச்சீட்டு பெறாமலும், முறையற்ற பயணத்தில் ஈடுபட்டு வருவாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனை தடுக்கும் வகையில் சேலம் தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் ரயில் பயணிகளிடைய தொடர் சோதனைகளும், ரகசிய சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி சேலம் டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தலைமையில் கடந்த வாரம் ஞாயிறன்று பயணிகளிடையே சோதனை நடைபெற்றது. அதில், முறையாக பயணச்சீட்டு இல்லாமை, பார்சல் பொருட்களுக்கான டிக்கெட் இல்லாமை உள்ளிட்டு 2,47,025 ரூபாயும், 546 நபர்கள் பயணச்சீட்டு முன்பதிவு பெறாமை என 2,43,325 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், இச்சோதனையில் அதிகப்படியான பொருட்களுக்கான அனுமதி சீட்டு பெறாததால் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் சோதனையில் அபராதமாக பெறப்பட்ட தொகையே சேலம் ரயில்வே கோட்டத்தினால் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான தொகை ஆகும். முன்னதாக 2016-யில் இதேப்போன்ற சோதனையில் சேலம் ரயில்வே கோட்டத்துறையால் 2,10,400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் சிறப்புப் படை வீரர்கள் 18 பேர் உட்பட 216 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும், ரயில் பயணத்தின் போது முறையாக பயணச்சீட்டு பெறாமை, அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்லும் போது அதற்கான தொகை செலுத்தாமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...