பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அடக்க வேண்டும் - தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: தென்னிந்திய திருச்சபைகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்ணுரிமை காப்போம், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டிப்போம் என்று ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து திருச்சபையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக கோவை திருமண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை அணிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பெண்ணுரிமை காப்போம்,பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டித்தும் கண்டன கோசங்கள் எழுப்பினர். தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மண்டல பிஷப் திமோத்தி ரவீந்தர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், பொருளாளர் டி.எஸ்.அமிர்தம், செயலாளர் பிரின்ஸ் கால்வின், துணை தலைவர் டேவிட் பர்ணபாஸ், வாலிபர் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் ப்ரீத்தி கரோலின், ஜேகோ சாமுவேல், உட்பட தென்னிந்திய திருச்சபைகள் கோவை மண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...