தாராபுரத்தில், மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தாராபுரம் அடுத்த ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் பள்ளி செல்ல சிரமப்பட்டு வருவதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை வழங்கியுள்ளார்.



திருப்பூர்: தாராபுரத்தில், மாற்றுத்திறனாளி மாணவனுக்கு சுமார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர மின்சார வாகனத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியம், கண்ணாங் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆலம்பாளையம் கிராமத்தில், வசித்து வரும் ரத்தினசாமி என்பவரது மகன் திவாகர். இவர் தசை வளர்ச்சி குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி.

கை மற்றும் கால்கள் தசை வளர்ச்சி குறைபாடு உள்ளதால், தானாக எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. இவ்வாறு உடல் நலக்குறைபாடு இருந்த போதிலும், திவாகர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். திவாகரை தினமும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று வரும் காரணத்தினால் ரத்தினசாமி எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது.



இதையறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மின்சார மூன்று சக்கர வாகனத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவரது சொந்த செலவில் வழங்கினார்.



மேலும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு உதவும் வகையில் வாகனம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...