காருக்குள் இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பு - லாவகமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பாம்பு இருப்பதை கண்ட ஓட்டுனர், பாம்பு பிடி வீரர் உதவியுடன் கொம்பேரிமூக்கன் பாம்பை பத்திரமாக பிடித்து பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: பாப்பநாயக்கன் பாளையம் அருகே காருக்குள் புகுந்த கொம்பேரி மூக்கன் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதி சேர்ந்த ஒருவர் தனது காரை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். சாலையில் கார் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, மழை நீர் வடிக்கும் வைப்பர் மீது பாம்பு ஒன்று எட்டிப் பார்த்து உள்ளது.

இதைப் பார்த்த அந்த காரின் உரிமையாளர், சிங்காநல்லூரில் உள்ள ஷோரூம் ஒன்றுக்கு ஓட்டிச் சென்று இருக்கின்றார். ஷோரூமில் இருந்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தரப்பட்டது.

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பைச் சார்ந்த பாம்பு பிடி வீரரும், வழக்கறிஞருமான சித்ரன் விரைந்து சென்று காரில் வைப்பர் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். அந்த பாம்பு கொம்பேரி மூக்கன் பாம்பு என்றும் பிடிக்கப்பட்ட பாம்பை அவர் பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் பாதுகாப்பாக ஒப்ப்படைத்தார்.

வனத்துறையினர் அதனை வனபகுதியில் விடுவித்தனர். மேலும் குறிப்பாக காரில் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக தண்ணீர் பீச்சு அடிப்பதோ அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி வெளியே வரவைக்க முயற்சி செய்வதோ கூடாது.

பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பாம்பை பாதுகாப்பாக மீட்பார்கள் என்றும் காருக்குள் புகுந்த பாம்பை விரட்டும் நோக்கில் பொதுமக்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என வன உயிரியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...