பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது


ஊட்டி பார்மசி கல்லூரி அரங்கில் 'சம்பரமா' கலை விழா துவங்கியது. இதில் 'இயல், இசை, நாடக கலையை மாணவ, மாணவியர் பாதுகாத்து, வளர்க்க வேண்டும்' என, கல்லூரி கலை விழாவில் தெரிவிக்கப்பட்டது.

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி அரங்கில், 'சம்பரமா' என்ற பெயரில் கலை விழா நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் டாக்டர் சின்னசாமி பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவியர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் கலையை பாதுகாக்க, வளர்க்க வேண்டும் என்றார்.



சிறப்பு அழைப்பாளராக, மைசூரு ஜெ.எஸ்.எஸ்., பல்கலை கழக பதிவாளர் டாக்டர் மஞ்சுநாதா பேசினார்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பணிபுரியும் நாளமில்லா சுரபி சார்ந்த மருத்துவ நிபுணர் சுரேஷ் தாமோதரன், கோவை ஜெம் மருத்துவமனை செயல் இயக்குனர் சங்கீதப்பிரியா, சென்னை 'அபெக்ஸ்' லேபாரட்டரி நிறுவன செயல் இயக்குனர் விஷாகன் ஆகியோர் பேசினர்.

இதனைத்தொடர்ந்து, மாணவியர் அபர்ணா, தாமினி, ஜனனி தலைமையிலான மாணவியர் குழுவினர் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். துணை முதல்வர் அப்சப் அசாம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஜெ.எஸ்.எஸ்., பல்கலையின் கீழ் செயல்படும், ஐந்து கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதில், வினாடி- வினா, நடனம், நாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நாளை மதியம் (மார்ச் 11) நிறைவு விழா நடைபெறவுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...