மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பளித்த மனிதநேயமிக்க கோவை மக்கள்


கோவை சக்தி- விளாங்குறிச்சி சாலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சரிவர ஆடைகளற்று சாலையில் சுற்றித்திரிந்தார்.



அவரைக் கண்ட இந்தியன் பப்ளிக் பள்ளி, கௌமரம் பிராஷ்த்தி சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிடிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பாலா ஆகியோர் தங்களிடம் இருந்த ஆடைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது போர்த்தி அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மேலும், காவல் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.



அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏதுமில்லை என அறிந்து அவரை அங்கேயே விட்டுச்சென்றனர்.



இதனிடையே, இதுகுறித்தான தகவல் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் நம்ம கோவை வாட்ஸ்அப் குழுவில் பரவ அங்கு வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் அப்பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர்ந்து அப்பெண்ணை ஈரநெஞ்சம் அறக்கட்டளையிலேயே பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன் ஒரு காலத்தில் நாம் அன்றாடம் பயணிக்கும் சாலையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டோ, உடல்நிலை பாதிக்கப்பட்டோ யார் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கடந்துசெல்வது வழக்கம். ஆனால், தற்போது மக்கள் மத்தியில் மனிதநேயமானது வளர்ந்துள்ளது என்பதற்கு கோவையில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் எடுத்துக்காட்டாகவே உள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...