துடியலூர் அருகே CRPF வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பு!

துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள CRPF வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டிஆர்டி.ஒ அனுமதி பெற்று மேக் நிறுவனம் மூலம் அனைத்து வகை கழிவு நீரையும் சுத்திக்கரிக்கும் பயோ டைஜெஸ்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டுள்ளது.



கோவை: துடியலூர் அடுத்த ராக்கிபாளையம் CRPF வளாகத்தில் ரூ.2.16 கோடி மதிப்பிலான பயோ டைஜெஸ்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டுள்ளது.



துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் உள்ள CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி) வளாகத்தில் பயோ டைஜெஸ்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை திறக்கப்பட்டது.



மேக் நிறுவனம் மூலம் அனைத்து வகையான கழிவு நீரையும் பயோ சுத்திகரிப்பு முறையில் ஒரு நாளைக்கு 4 லட்சம் லிட்டர் அளவில் சுத்திகரிப்பு செய்து, அதிலிருந்து கிடைக்கபெறும் நீரை மரங்கள், தோட்டங்கள், பூங்காக்களுக்கு, பயன்படுத்தும் வகையில் உருவாக்கபட்டுள்ளது.



சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அன்றாட பயன்பாட்டில் உருவாகும் கழிவு நீர் வளாக பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசி வந்துள்ளது.



இதற்கு தீர்வு காணும் வகையில் சுமார் 2.16 கோடி மதிப்பில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டிஆர்டி.ஒ அனுமதி பெற்று மேக் நிறுவனம் மூலம் அனைத்து வகையான கழிவு நீரையும் சுத்திகரிக்கும் பயோ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் அங்கு உருவாகும் பல்வேறு வகையான கழிவு நீர் பயோ சுத்திகரிப்பு முறையில் ஒரு நாளைக்கு 400 கிலோ லிட்டர் அளவில் சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து கிடைக்கப் பெறும் நீரை சிஆர்பிஎப் வளாகத்தில் உள்ள மரங்கள், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.



இதன் மூலம் நுர்நாற்றம் இல்லாமல் கழிவு நீர் 100 சதவிகிதம் சுத்திகரிப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இதன் திறப்பு விழா CRPF பயிற்சி கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் அஜய் பரதன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை CPWD மூத்த பொறியாளர் பவன் குமார் குப்தா, மேக் நிறுவன நிறுவனர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், CRPF கமாண்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...