பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கடுமையாக ஆட்சேபனை செய்வதாக திருநாவுக்கரசர் பேட்டி

தமிழகம்- கேரள மாநிலத்திற்கு இடையே பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்துக்கொள்வதாக அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆர்.கே.நகரில் கடந்த முறை கூட்டணி கட்சியான தி.மு.க போட்டியிட்டது எனவும் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் எனவும் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அதிமுக கட்சியானது மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கின்றது எனவும் மக்களிடம் வாக்கு கேட்டு செல்லும் போது தங்கள் அணிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மேலும், இடைத்தேர்தலில் ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

இராமேஸ்வரத்தில் இறந்த மீனவர் குடும்பத்தை சந்தித்து பேசியதாக தெரிவித்த அவர், கடந்த கால பேச்சுவார்த்தைகளை  இலங்கை அரசு பின்பற்றவில்லை எனவும் கடந்த 3 ஆண்டுகளில் 135 படகுகளை கைப்பற்றிய இலங்கை அரசிடம் இருந்து இது வரை எந்த ஒரு படகினையும் மீனவர்களுக்கு இந்திய அரசு மீட்டுக்கொடுக்கவில்லை எனவும் தமிழக மீனவர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சுஷ்மா சுவராஜ் அல்லது மூத்த அமைச்சர்கள் டெல்லியில் இருந்து வர வேண்டும் என்பதில் போராட்டத்தில் இருப்பவர்கள் உறுதியாக இருக்கின்றனர் எனவும், இந்திய தண்டணை சட்டப்படி மீனவர் மீது துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசிடமிருந்து ஒரு கோடி நஷ்ட ஈடு பெற்று பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கடுமையாக ஆட்சேபனை செய்வதாக தெரிவித்த அவர், தமிழக அரசின் எதிர்ப்பை மீறி அணைகள் கட்டப்படுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும் எனவும் கேரள அரசை கண்டித்து வரும் 12ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லாமல் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்க வேண்டும் எனவும், உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த தமிழக தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முன்வர வேண்டும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...