ரூ.30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் தொலைத்த மற்றும் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தொலைத்த மற்றும் திருடப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் தொலைத்த மற்றும் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, இன்று 30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேசியதாவது,



இன்று 30 லட்சம் மதிப்பிலான 145 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுவரை இரண்டு கோடியே 30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போதை இல்லா கோவையை உருவாக்கும் பொருட்டு, "MISSION KALOORI" திட்டம் துவக்கப்பட்டு, போதைப் பொருள் குறித்தான விழிப்புணர்வு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



மேலும் போதைப் பொருள் குறித்தான புகார்களை அளிப்பதற்கு "90032 51100" என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் இருந்து நான்கு கோடி மதிப்பிலான திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 298 போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் 4310 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசர் நிர்ணயித்த நேரங்களை தாண்டி விற்பனை செய்யப்பட்ட 34,350 மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளை பொருத்தவரை இந்த ஆண்டு தற்போது வரை 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

236 லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் கோவையில் பைக் திருட்டில் ஈடுபட்டு விபத்தில் உயிரிழந்த இருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி வந்துள்ளார்கள் எனவும் அவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதாகவும், மேலும் அவருடன் இணைந்து உள்ள ஒரு நபர் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடந்த ஆண்டு மட்டும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் கந்துவட்டி விவகாரத்தால் தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது அதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...