கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து மின்சார பற்றாக்குறை தீர்ப்பது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது

கோவையில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையினை தீர்ப்பது குறித்து கோவை மாநகராட்சியுடன் சிஐஐ மற்றும் ஐஜிபிசி இணைந்து பில்டிங் எபிசியன்சி எக்சலரேட்டர் என்னும் பயிலரங்கை நடத்தியது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் டி.ஆல்துரை இக்கருத்தரங்கில் பேசும்போது, பசுமை கட்டிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சிஐஐ மற்றும் ஐஜிபிசி-க்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஒரு மெகா வாட் அளவிற்கு மின்சாரப் பயன்பாட்டினை குறைத்ததற்காக பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஆல்துரை தனது உரையில் மேலும் பேசுகையில், இந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 37 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சார அளவை அதிகரிக்கக்கத்திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

சிஐஐ கோவை கிளையின் துணைத் தலைவர் எம்.ரமேஷ் பேசுகையில், கோவையில் தற்பொழுது 35 ஐஜிபிசி சான்று பெற்ற உலகத்தரம் வாய்ந்த திட்டங்கள் ஐடி பார்க், தொழிற்சாலைகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோறின் ஒத்துழைப்பால் இந்த கருத்தரங்கம் ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறும். இது கோவையை செழுமைமிக்கதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றும் என்றார்.

ஐஜிபிசி கோவை மாவட்டத் தலைவர் ராஜேஸ் பி லுன்டு பேசுகையில், இன்று நடைபெற்ற இப்பயிலறங்கில் கோவை மாநகராட்சி சார்பாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பாகவும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது கோவையைச் சேர்ந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அளித்த ஒத்துழைப்புகள் குறித்தும், கோவையை செழுமைமிக்கதாக மாற்றும் முயற்சியில் அவருடைய அர்ப்பணிப்பும் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...