திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமிற்கான பணிகள் துவக்கம்!

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகாமிற்கு தேவையான பொருட்களை பிரித்து அனுப்பும் பணி வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று துவங்கியது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமிற்கான பணிகள் துவங்கியுள்ளன.

தமிழக அரசு செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனிடையே தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்ற முடிவடைந்த நிலையில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.

இதற்காக திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 145 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 1,46,350 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கு தேவையான பொருட்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரித்து அனுப்பும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...