சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை கல்லூரியில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்


கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மைக் கல்லூரியில் இன்று மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பீளமேடு பகுதியின் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் வி.சாரதா, பெண்கள் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான அசோசியேசன் தலைவர் பி.சுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சி.ரமேஷ்குமார் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் வி.சாரதா நிகழ்ச்சியில் பேசுகையில், "இன்று சர்வதேச மகளிர் தினம் மற்றும் எல்லாப் பெண்களும் தங்களைத் தாங்களே அதிகாரப்படுத்திக் கொள்ள வேண்டும். பல்லாயிரக் கணக்கான வாய்ப்புகள் இன்றைய பெண்களுக்கு உள்ளது. அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவிகள் வங்கித் தேர்வுகள் எழுதி வங்கித் துறையில் தங்களது வேலையினை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும். வங்கி வேலைகள் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானவை. வங்கித் துறையில் பணியாற்றும் பெண்கள் தங்களது குடும்ப வாழ்வையும், வேலையையும் எளிதாக கையாள முடியும்" என்று கூறினார்.



இதைத்தொடர்ந்து பேசிய சுதா, தொழில்முனைவோராக தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பல தொழில்முனைவோர்களின் வெற்றிக் கதைகளை மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார். அவர் தனது, எம்பிராய்டரி நிறுவனத்தின் கதையை கூறினார். ஒபீடா அமைப்பு பெண்களின் புதிய நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்கள் தொழில் துவங்குவதற்கான உதவிகளை செய்திறது. அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தொழில் துவங்குவதற்கு முன் அதனுடைய சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தயாரிக்கவும் பயிற்சியளிக்கிறது என கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், இந்த ஒபீடாவின் முக்கிக் குறிக்கோள் பெண்களுக்கு என்று தனி அடையாளம் உறுவாக்கி அவர்களுக்கு சுதந்திரமான ஒரு வாழ்வை மேற்கொள்ள உதவுவதே ஆகும். இந்த அமைப்பு மானியம் பெருவது குறித்த தகவல்களும், சந்தைப் படுத்துதல் மற்றும் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் குறித்தும் பெண்களுக்கு பயிற்சியளிக்கிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...