தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

தாராபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கான கோரிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் நகராட்சி வளர்ச்சிக்கான கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகள் தேர்வு செய்வதற்கான கவுன்சிலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில். துணை தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் எஸ்.எம்.பாரிஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது, தாராபுரம் நகராட்சி பகுதியில் சாக்கடை, சாலை வசதி மற்றும் குடிநீர் திருமணமண்டபங்கள் கட்டுவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க அரசிடமிருந்து ரூ. 25 கோடி தேவைப்படும் என்று நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை மனதில் கொண்டு கூடிய விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் தாராபுரம் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி வளர்ச்சிக்கு உதவியாக இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறியதாவது,



நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு இதுவரை ரூ.12 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு வளர்ச்சி பணிகள் நகராட்சியில் செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டுகால கோரிக்கையாக நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மக்கள் பணியை இரவு பகல் பாராமல் உழைக்கும் எங்களுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவுன்சிலருக்கு ரூ. 5000, துணைத் தலைவர் ரூ.10,000, தலைவருக்கு ரூ 15,000 மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் நகரா வளர்ச்சிக்காக ரூ 25 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை கூடிய விரைவில் அமைச்சர் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹெடெக் அன்பழகன், முபாரக் அலி, சீனிவாசன், சக்திவேல், தேவி அபிராமி, உஷா பானு நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...