வேடப்பட்டி ஏரியை தூர்வாரிய பிஎஸ்ஜி கல்விக் குழுமம் மற்றும் சிறுதுளி அமைப்பு

கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்விக் குழுமம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சிறுதுளியுடன் இணைந்து வேடப்பட்டி புதுக்குளத்தில் அமைந்துள்ள ஏரியினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த ஏரியானது 20 வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது தூர்வாரப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.



தூர்வாரியதன் பிறகு இந்த ஏரியின் கொள்ளளவு 3.5 எம்.சி அடி ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 20 ஹெக்டர் ஆகும். அதிகமான மழை வரும் காலங்களில் இந்த ஏரி வெள்ளத்தில் இருந்து தடுக்கும். மழை அளவு குறையும் பொழுது வறட்சியில் இருந்து பாதுகாக்கும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு புகழிடமாக திகழ்வதன் மூலம் இந்த ஏரி பல்லுயிர் தன்மையை பாதுகாக்க உதவும்.



இந்த ஏரியில் மீன் பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழும் மீனவர்களுக்கு அது வாழ்வாதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் தொடர் கண்காணிப்பின் மூலம் ஏரியின் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...