கோவை போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் ஆய்வு!

கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சீரான போக்குவரத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அவருடன் மாநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் மற்றும் காவல் துறையினர் சென்றனர்.



அப்போது திருச்சி சாலை சுங்கம், சுங்கம் மேம்பாலம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் சந்திப்பு, காந்திபுரம் பேருந்து நிலையம் சந்திப்பு, பார்க் கேட் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.



பின்னர், போக்குவரத்து சீராக செல்வதற்கும், சிக்னல்கள் பணிகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்து சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...