அத்திக்கடவு அவிநாசி திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரும் - தலைமை பொறியாளர் தகவல்

அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது, சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அடுத்த மாதம் முழு பயன்பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறியுள்ளார்.

அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை மற்றும் சோதனை ஓட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கினர்.

மேலும், இந்த திட்டம் சில மாதங்களில் முடியும் நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அந்த நீரை முறையாக பாசனத்துக்கு பயன்படுத்தத் திட்டமிடுவது குறித்தும், கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் குளங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் மின்சாதனப் பொருள்களின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

இதனையடுத்து, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது, அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிப்ரவரி முதல் தொடர்ந்து குட்டைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும்,

இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அன்னூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...