ஆர்.எஸ்.எஸ் தனது கால் செருப்பிற்கு சமம் என்ற கேரள முதலமைச்சரின் கருத்திற்கு பரிதாபப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் செய்தித்தொடர்பாளர் பேட்டி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது தனது கால் செருப்பிற்கு சமம் என்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறிய கருத்திற்கு தான் பரிதாபப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.

கோவை எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் வருகிற மார்ச் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது.

இதில் அவ்வமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் நந்தகுமார் கலந்து கொண்டு பேசுகையில், நாடு முழுவதிலுமிருந்து 1500 மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதில் நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேவையாற்றி வரும் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

பா ஜ க, ஏ.பி.வி.பி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட கிளை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது கால் செருப்பிற்கு சமம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறிய கருத்திற்கு தாம் பரிதாபப்படுவதாகவும், உலகம் முழுவதும் மறைந்துவிட்ட மார்க்சிஸ்ட் கருத்துக்களை தாங்கிபிடிக்க முயல்பவர்களின் கருத்துக்காக தாம் பரிதாபப்படுவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

வன்முறையால் கட்டமைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் அமைப்பு மற்றவர்களின் ரத்தத்தால் ஆட்சியினை தொடர முயல்வதாக குற்றம்சாட்டிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஆனால் அதனை கடந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கேரளாவில் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...