கோவையில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 17,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று துவங்கியது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 17,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இப்பணிகளை ஆய்வு செய்ய, டெல்லியில் இருந்து ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் வந்துள்ளது. இந்த பணிகளில் ஏதேனும் இயந்திர கோளாறுகள் இருந்தால் அவை சரிசெய்யப்படும்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், தெற்கு வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு பிரதிநிதி உடன் இருந்தார்.

இப்பணிகள் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. கூடுதலாக பாதுகாப்பு பணிக்காக காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...