வால்பாறை, நடுமலை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

வால்பாறையை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையின் சுவர் மற்றும் கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைத்து ஒற்றை காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை தின்றது.



இச்சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் கூச்சல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த காட்டுயானை வால்பாறை ஐயப்பன் கோவில் பகுதியிக்கு சென்று நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் யானையை காட்டிற்குள் விரட்டினர்.



தொடர்ந்து வால்பாறைக்கு உட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு வருவதால், கும்கி யானைகளை வைத்து காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இதேப் போல் கடந்த இரு தினத்திற்கு முன்பு சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டுயானை கூட்டம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அழகர்சாமி, ஏசையன், பழனிசாமி ஆகியோரது வீட்டின் முன்புறம் இருந்த தகர செட்டுகளை உடைத்தது. தொடர்ந்து காட்டு யானை பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...