கோவை அருகே பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. தேக்குவட்டை பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மஞ்சக்கண்டி பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.



இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையிலும், பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து, கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த சூலூர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் கீழ் பவானி பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், பவானி ஆற்றை நம்பி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முடியாது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படும் என கூறிய அவர்கள், இப்பிரச்சனையை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும், இப்போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...