மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்குவதாக கூறி மோசடி - 5 பேர் கைது!

10, பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை குறிவைத்து, அரசு கல்வி உதவி பெற்று தருவதாக கூறி 500க்கும் மேற்பட்டோரிடம் கோடி கணக்கில் மோசடி செய்த சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸா (28), ஜமேஷ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவி தொகை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு மூலம் கல்வி உதவி தொகை வழங்குவதாக கூறி ஏழை எளிய மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து பணத்தை மோசடி செய்து வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அடுத்தடுத்து 7 புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.



தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில் ரகசிய தகவல் மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸா (28), ஜமேஷ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகிய 5 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பிடிபட்ட 5 பேரும் ஒரே பகுதியை சேர்ந்த, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, நண்பர் மூலம் டெல்லி சென்று எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என பயிற்சி எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இணையம் மூலமாக அண்மையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை திருடி அதை வைத்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் சாதாரண அழைப்புகள் மூலம் அழைத்து, அவர்களது குழந்தைக்கு தமிழக அரசின் சார்பில் கல்வி உதவி தொகை வந்துள்ளதாகவும், அதனை வங்கி கணக்கிற்கு அனுப்பியாச்சு எனக்கூறி போலியான ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகின்றனர்.

மேலும் அதனை பதிவு செய்ய QR code அனுப்பியுள்ளதாக கூறி அதனை ஸ்கேன் செய்யுமாறு கூறுகின்றனர். அதனை அப்பாவி மக்கள் நம்பி ஸ்கேன் செய்யும் போது அவர்களது வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் இந்த இளைஞர்கள் எடுத்து விடுகின்றனர். மேலும் அதனை வைத்து சுமார் ஆயிரம் முதல் வங்கியில் உள்ள அனைத்து தொகையையும் எடுத்து கொள்கின்றனர்.

பெரும்பாலும் ஏழை எளிய படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுக்கு பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது கூட தெரியாமல் இருந்துள்ளனர்.  மேலும் மோசடி கும்பல் மக்களை நம்ப வைக்க அரசு லோகோவையும் பயன்படுத்தியுள்ளனர்.

கோவையை சேர்ந்தவர்களிடம் மட்டும் ரூ.7 லட்சம் மோசடி செய்துள்ளதும், இதுவரை கிடைத்த தகவல் அடிப்படையில் 500 பேரிடம் இவ்வாறு மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து மொத்தமாக அழித்துள்ளனர்.

தற்போது பள்ளி சீசன் என்பதால் அதனை பயன்படுத்திய கும்பல் அடுத்த மோசடிக்கும் தயாராகி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகம், ஒரு காசோலை, 7 ஏ.டி.எம் கார்டுகள், ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



பொதுமக்கள் அரசு கல்வி தொகை, அரசு சலுகைகள் வழங்குவதாக கூறி செல்போனுக்கு அழைப்பு வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...