சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகளை உருவாக்க புரூக்ஃபீல்டு பெண்கள் வொண்டர் மன்றம் பயிற்சி


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புரூக்ஃபீல்டு வனிக வளாகம் சார்பில் புரூக்ஃபீல்டு பெண்கள் வொண்டர் மன்றம் என்னும் அமைப்பு சுற்றுச் சூழலுக் தீங்கு ஏற்படுத்தாத பழைய துணிகளைக் கொண்டு பைகள் தயாரிக்கும் பயிற்சியினை வழங்கி வருகிறது.

இதில், சமூக பொறுப்புள்ள பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று துணிகளின் மூலம் பைகள் செய்து பிளாஸ்டிக் பையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.



இந்த பயிற்சிப் பட்டறையியில் மேல்தளம் தோட்ட சித்ரா கிருஷ்ணசாமி பங்கேற்று, துணிகளால் ஆன பைகள் குறித்து அறிமுகம் செய்து பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மக்காத பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து எழிதில் மக்கும் தன்மையுடைய துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என கூறினார்.



இப்பயிற்சிப் பட்டறையின் இடையே கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் துணிகாள் பைகள் செய்யும் பயிற்சி வகுப்பிற்கு வந்து, பயிற்சி மேற்கொண்டிருந்தோரிடம் துணி பைகள் குறித்தும், இதனை தயாரிக்கும் கலைகள் குறித்தும் எடுத்துக்கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து, இதுபோன்ற முயற்சிகள் மூலம் கோவை மாநகரத்தில் பிளாஸ்டிக் பைகளின் பையன்பாட்டை படிப்படியாக குறைக்க முடியும் என்றும், மக்கள் தங்களது தேவைகளுக்கு பிளாஸ்ட்டிக் பைகளைத் தவிர்த்து துணிப் பைகளையே பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் க.விஜயகார்த்திகேயன் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற இதன் இரண்டாம் நாள் அமர்வில் மை சாப்பிங் மை பேக் அமைப்பினர் பங்கேற்று துணிகளால் ஆன பைகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என பயிற்சி அளித்தனர். 

இந்நிகழ்வில் பிளாஸ்டிக் பையினால் வரும் தீமைகள் குறித்தும், பொருட்கள் வாங்கச் செல்லும் போது தாங்களே தயாரித்த துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, பழைய துணிகள், காட்டன் புடவை, போர்வை உள்ளிட்ட துணிகளைக் கொண்டு எவ்வாறு பைகள் தயாரிக்க வேண்டும் என்று செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.



இதில், கத்தரிக்கோள், ஊசி மற்றும் பழைய துணியினைக் கொண்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவமைப்பிலான பைகளை செய்வது குறித்தும், ஊசி பயன்படுத்தாமலும், கையினால் முடிச்சு போட்டே பைகளை தயாரிப்பது குறித்தும்  பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், இது விழிப்புணர்வு நிகழ்வு மட்டுமே அல்லாமல் இந்நிகழ்வின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட கருத்துகளும் பங்கேற்பாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இதில் பங்கேற்ற பெண்கள் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான பைகளை தயாரித்து நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பெரும் பகுதி மக்களிடையே கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் உரையாடப்பட்டது. இந்த முயற்சியின் மூலமாக "பிளாஸ்டிக் பைகள் இனி வேண்டாம், மாசு ஏற்படுத்தாத துணி பைகளே வேண்டும்" என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த முயற்சி சமூகத்தில், சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இதன் ஒருங்கிண்ப்பாளர் தெரிவத்தார்.

இன்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையினைத் தொடர்ந்து பெண்கள் வொண்டர் அமைப்பினர் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்தான நிகழ்ச்சியினை மார்ச் 7ம் தேதியன்று நடத்தவுள்ளதாகவும், இதில் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பங்கேற்பார் என்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...