'நமது வார்டும் நமது வீடே' 27வது வார்டில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை


'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27வது வார்டு, சின்னவேடம்பட்டியில் நம் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டத்தை மண்டல சுகாதார அலுவலர் அருணகிரி தலைமையில் இன்று காலை 8:30 மணியளவில் துவங்கியது.



இதில் சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். 



இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு நிகழ்ச்சி இனிதே துவங்கியது.



இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், நமது வார்டும் நமது வீடே என்ற தலைப்பின் முக்கிய நோக்கமாக இன்றைய காலகட்டத்தில் நிலமும், நீரும், காற்றும் மசுபட்டு வருவதால் நமது குழந்தை மற்றும் சந்ததிகளின் உடல் நலமும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுநல மனப்பான்மையுடன் நாம் ஒன்றிணைந்து வாரம் ஒரு மணிநேரம் நமது வார்டில் சேவை செய்வதன் மூலம் நம் சந்ததிகளின் காலமும் பொற்காலமாகும் என்பதற்காகவே வாரம் ஒரு மணிநேரம் சேவை பொது நல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.



அதில் 27-வது வார்டு சின்னவேடம்பட்டி பகுதியில் இந்த பொதுநல திட்டத்தின் மூலம் மற்ற வார்டுகளுக்கும் இத்திட்டம் முன்மாதிரியாக விளங்குகிறது. தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து விழாவில் பங்கேற்ற பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது என்றனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...