மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், கோயம்புத்தூர் அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 345 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும், 201 மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்; அம்மா அவர்கள் துவக்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தொலை நோக்குப்பார்வையுடன் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஒரு நாட்டையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான் என்பதை உணர்ந்த தமிழக அரசு, மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்ப கல்வி முதல் கல்லூரி கல்வி வரை எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றது. அவ்வாறு வழங்கப்படும் திட்டங்களனைத்தும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவை சார்ந்த துறைகளின் மூலம் உடனுக்குடன் பெற்று வழங்கப்படுகின்றது.



இன்றைக்கு 2016-17 கல்வியாண்டிற்கு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த 201 மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினுடைய நோக்கம் உலக அளவில் கல்வித்தரத்தினை கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதாகும். ஒரு காலகட்டத்தில் ஏழை மாணவ மாணவியர்களின் கனவுப்பொருளாக இருந்த மடிக்கணினியை இன்று அனைத்து மாணவ மாணவியர்களின் மடியில் தவழுகின்ற கணினியாக திகழந்திட செய்தவர் அம்மா அவர்களே. இத்திட்டத்தை பிற மாநிலங்கள் தேர்தல் காலகட்டங்களில் வெற்றிக்காக முன்னிருத்தி பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் அவர்களால் அதை தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை இன்றைக்கு இந்தியவே திரும்பி பார்க்கின்ற விதமாக அனைத்து திட்டங்களையும், முழுமையாக நிறைவேற்றி முழுவெற்றியைப் பெற்றவர் என்றால் தலைசிறந்த ஒரே தலைவர் அம்மா அவர்கள் மட்டுமே. 

அதேபோல 2016 – 17ம் ஆண்டிற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு அரசு பள்ளிகளுக்கும், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றைக்கு குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 64 மாணவ மாணவியர்களும், சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்களுக்கும், சென்னனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 97 மாணவ மாணவியர்களுக்கும், மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 89 மாணவ மாணவியர்களுக்கும்  என மொத்தம் 345 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், இதேபோல் அரசின் திட்டங்களை அனைத்து மாணவ மாணவியர்களும் பெற்று பயன்பெறுவதுடன் இப்பகுதிகளிலுள்ள மாணவ மாணவியர்கள் உயர்கல்வி வரை படிக்க வேண்டும். படிக்க வசதியில்லாத நிலையில் உள்ள மாணவர்கள் எனது (தொண்டாமுத்தூர்) சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் விண்ணப்பித்தால் கண்டிப்பாக உயர்கல்வி வரை பயில வழிவகை மேற்கொள்ளப்படும். இப்பகுதியிலிருந்து ஒவ்வொரு மாணவர்களும் எதோ ஒரு பதவியில் வரும்பொழுது நம் ஊருக்கு மட்டுமின்றி நமது தொகுதிக்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை கிடைத்திடும் என்பதை மனதில் நிலைநிறுத்தி ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து தேர்வுகளில் மாநில அளவில் உயர்ந்த மதிப்பெண் பெற்றிடவும், உயர்ந்த பதவிகளை பெற்றிட வேண்டும் அதுமட்டுமின்றி, அரசுப்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்குத்தேவையான உதவிகள் உடனுக்குடன் செய்து தரப்படுகிறது. அதுபோன்ற திட்டங்களையும் தேவைக்கேற்ப பெற்று பள்ளி நிர்வாகம், பயன்பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, அம்மன் கே.அர்ச்சுணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, துணை ஆட்சியர்கள் சரவணமூர்த்தி, மோகன், சுரேஷ், சென்னியப்பன், தலைமையாசிரியர்கள் தனபாக்கியம், ஜனார்த்தனன், மணிபாலா மற்றம் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...