அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் - எஸ்.பி.வேலுமணி உறுதி!

கோவை அருகே கரடிமடை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடைபெறுவது குறித்து தட்டிக்கேட்ட அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை கரடிமடை பகுதியில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது.

குறிப்பாக கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக்கை நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகியோர் தாக்கியதில் அவர் பலியாகியுள்ளார்.

இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தி உள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு காவல்துறை ஆதரவாக உள்ளது. கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனித்தீர்மானம் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...