வார்டு எண் 17யில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி பூங்கா.

கோவை மாவட்டம் மேற்கு மண்டலம், வடவள்ளி, 17வது வார்டுக்குட்பட்ட குருசாமி நகர் பகுதியில் புதுப்பிக்கப்படாமல் இருந்த மாநகராட்சி பூங்கா தற்போது ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களாக நடைபெறும் பூங்காப் பணியினை நேற்று கோயமுத்தூர் மாவட்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் காந்திமதி ஆகியோர் நேரில் சென்று மாநகராட்சி பூங்காவினை பார்வையிட்டனர்.



இது குறித்து கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளரிடம் பேசுகையில்; வடவள்ளி 17வது வார்டு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா 1800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்காவின் பராமறிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் பூங்கா பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் இப்பூங்காவின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து மாநகராட்சி பூங்கா விரைவில் திறக்கப்படும். தற்போது குருசாமி நகர் மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் நடத்து செல்லும் நடைபாதை விரிவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, இளைஞர்கள் இறகு பந்து விளையாடுவதற்கான தனி இடம், முதியவர்கள் அமருவதற்கு இருப்பிடம், பூங்காவின் சுற்று வட்டாரத்தில் 6 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பூங்காவிற்கு சுற்று புறத்திலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்படும் வெளிப்புறத்தில் இருசக்கர வாகனத்திற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இது குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது; ஆறு மாதங்களுக்கும் மேலாக எங்கள் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமறிக்கப்படாமல் இருந்தது. புதற்கடுகளாக இருந்த இப்பகுதியை விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  மாநகராட்சியிடம் மனு அளித்தனர். இல்லையென்றால் நாங்கள் எங்கள் பகுதியை பரமாறித்து கொள்வதாக கூறிய பின்னர், மாநகராட்சி தற்போது பூங்கா பணியினை விரைவில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது இப்பூங்காவிற்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்பூங்கா காலை 6 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறக்கப்படுகிறது. இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...