கேஎம்சிஎச்-யில் நரம்பு இடையீட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் இரண்டாவது ஆண்டு மாநாடு துவக்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கேஎம்சிஎச்) நரம்பியல் மருத்துவர்கள் சமீப ஆண்டுகளாக ரேடியோலஜி தொழில்நுட்ப இடையீட்டு மருத்துவ முறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு ரேடியோலஜி இடையீட்டுத் துறையும் மாறி வருகின்றன.

குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு அதிநவீன நரம்பு இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மருந்துகள் போன்றவையும் சமீபகாலத்தில் சுலபமாக கிடைக்கின்றன.

உலக அளவில் நிபுணர்கள் மேற்கொள்ளப்படும் நரம்பு மருத்துவ இடையீட்டு கதிர்வீச்சு மருத்துவ துறைமாறி வரும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப தகவல்களை அறிந்தும், அறிந்தவற்றை பிற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொண்டும் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இவற்றை இயக்கி வரும் கதிர்வீச்சியல் மற்றும் இடையீட்டியல்துறை தலைவர் மருத்துவர் மாத்யு செரியன், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மார்ச் 2 முதல் மார்ச் 4, 2017 வரை நரம்பு பாதிப்பு சிகிச்சை சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ருஸ் பல்கலைக கழக மருத்துவ மையம் மருத்துவர் டெமட்ரியஸ் லேபேஜ், மருத்துவர் டொனால்ட் பிரான்சிஸ் டென்வர், இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் எடராடோபொகார்டி, கனடாவைச் சேர்ந்த மருத்துவர் மயன்க்கோயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மைக்கல் மாவாட், துருக்கியைச் சேர்ந்த மருத்துவர் நாசி கோசர், ஜெர்மனி சேர்ந்த மருத்துவர் ரெனே சாபட், மருத்துவர் ஹான்ஸ் ஹென்கஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுடன் நரம்பியல் கதிவீர்ச்சில் நிபுணத்துவம் பெற்ற 50 இந்திய மருத்துவர்கள், நரம்பியல் பிரிவு விரிவுரையாளர்கள், பங்கேற்று பயிற்சியும் கருத்தரங்களையும் நடத்தவுள்ளனர். 

நியுரோ இன்டர்வென்ஷன் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சு துறையின் தலைவர் மருத்துவர் மேத்யு செரியன், இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளராக பொறுப்பேற்று நடத்துகிறார். 

இந்த ஆண்டு மாநாட்டின் துவக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் இத்தாலி, மிலன் நகரில் இருந்து வரும் மருத்துவர் எடராடோபொகார்டி, சர்வதேச அளவிலான விரிவுரை வழங்குகிறார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் கற்றுத்தேர்ந்த அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...