கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் மூதாட்டி படுகாயம் - பொதுமக்கள் அச்சம்!

கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் கிராமத்தை சேர்ந்த ருக்குமணி என்பவர் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற போது புதரில் மறைந்திருந்த கரடி திடீரென அவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


நீலகிரி: கோத்தகிரி அருகே மூதாட்டியை கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி ருக்குமணி (75). இவர் தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு அருகேயுள்ள குடிநீர் குழாய் அருகே சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த கரடி ருக்குமணியை தாக்கியது. இதனால் கை, மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரடியை விரட்டி விட்டு, காயமடைந்த ருக்குமணியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ருக்மணிக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...