சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் 3ம் இடம் பிடித்த சென்னை மண்டலம்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 12-ம் வகுப்பில் 87.33 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 93.12 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். சென்னை மண்டலம் தேர்ச்சி விழுக்காட்டில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.


மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது.

இதேபோல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவ-மாணவியர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில், தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 87.33 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் 97.40 சதவிகித மாணவ, மாணவிகளின் தேர்ச்சியைப் பெற்று சென்னை மண்டலம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவியர் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில், 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியர் பற்றிய விவரங்களை வெளியிடப்படவில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...