வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறி

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி 7ஆவது மலையில் உச்சியில் சிவலிங்கத்தை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் மலை ஏறுகின்றனர். அப்படிச் செல்லும் பக்தர்கள் துணிகள் உள்ளிட்ட பொருட்களை விட்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் விட்டுச் செல்லும் துணிகளால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை அருகே பூண்டி வெள்ளியங்கிரியில் 7ஆவது மலை உச்சியில் சிவலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலை ஏறி செல்கிறார்கள். எனவே மலைப்பகுதியில் ஒருமுறை பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது.

வெள்ளியங்கிரி மலையேற மார்ச், ஏப்ரல் மாதங்களில் வனத் துறையினர் அனுமதி அளிக்கின்றனர். மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி மே 31ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

வெள்ளியங்கிரி மலையேற தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகிறார்கள். வெள்ளியங்கிரியில் 6-வது மலையில் ஆண்டி சுனை ஓடை உள்ளது. மலையேறும் பக்தர்கள் அந்த சுனையில் வரும் குளிர்ச்சியான நீரில் குளித்து விட்டுத் தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்கிறார்கள். சுனையில் குளிக்கும் சிலர் தங்கள் ஆடைகளை அங்கேயே போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

இதனால் மலையில் பல இடங்களில் ஆடை மற்றும் துணிகள் கிடக்கிறது. இதனால் மலையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு ஆடைகளை போட கூடாது என்று தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதைப் பலரும் கண்டு கொள்ளாத நிலையே உள்ளது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறும்போது, ஓடையில் துணிகளை போடக்கூடாது. ஆனாலும் சிலர் துணிகளை போட்டு செல்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்றனர்.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு நிர்வாகி காளிதாஸ் கூறும்போது, வெள்ளியங்கிரி மலைப்பகுதியை சூழலியல் வனப்பகுதியாக அறிவிக்க முன்மொழிவு நீண்டநாளாக நிலுவையில் உள்ளது. மலையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது பக்தர்களின் கடமை ஆகும். இயற்கைக்கு எதிரானது, கடவுளுக்கு எதிரானது என்பதை பக்தர்கள் உணர வேண்டும் என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...