கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய தாதாவுக்கு வலைவீச்சு - மும்பையில் முகாமிட்டுள்ள தனிப்படை!

கோவையில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் தருவது, ஜாமீனில் எடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்த பிரபல தாதா தில்லி என்பவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக கருதப்படும் தாதாவை தேடி கோவை தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு படுகொலை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ரவுடி கோஷ்டிகளுக்கும், கஞ்சா விற்பனையாளர்களும் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை ஒடுக்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாகமாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள், தொடர்ந்து குற்றங்கள் ஈடுபடுவோர் என 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான குற்றவாளிகள் பலரது பின்னணியில் தில்லி என்ற மர்ம நபர் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இந்த நபர் கொலை செய்யும் ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்பவருக்கு பின்புலமாக இருந்து பண உதவி செய்து, தன் வளையத்திற்குள் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவது அவர்கள் கைது செய்யப்பட்டால் வக்கீல் மூலம் ஜாமீன் எடுப்பது போன்ற வேலைகளையும் அந்த நபர் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் இதுவரை போலீசில் பிடிபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி என்ற அந்த நபரை கைது செய்ய திட்டமிட்டகோவை தனிப்படை போலீசார் சென்னை, மும்பை நகரங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...