பொது இ-சேவை மையத்தில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெறலாம் என ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் வண்ணப்புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பிளாஸ்டிக் ஆதார்கார்டு போன்றவற்றை பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக மக்கள் சிரமமின்றி எளிதாக சான்றிதழ்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதே பொது இ-சேவை மையமாகும். இந்த திட்டம் அனைத்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 231 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 1,38,995 சாதிச் சான்றிதழ்களும், 1,82,037 வருமான சான்றிதழ்கள், 6,67,93 இருப்பிட சான்றிதழ், 10405 முதல்பட்டதாரி சான்றிதழ், 61 கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், 33,239 பட்டா மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல், 2 பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தல், மின்கட்டணம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை எடுத்தல் போன்ற பல்வேறு வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்போது வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளும் ரூ.50 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை உள்ள பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவித்து வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

மேலும், இச்சேவை மையங்களிலேயே ஏற்கனவே ஆதார் எண் உள்ளவர்கள் புதிய ஆதார் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்" என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...