திருப்பூர் அருகே சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா - 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் அருகே நடைபெற்ற சித்திரகுப்தர் கோவில் திருவிழா நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நான்காயிரம் கிலோ அரிசியைக் கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் சின்ணாண்டிபாளையம் பகுதியில் ஸ்ரீ சித்திரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்திரகுப்தருக்கான தனிக்கோயில் தமிழகத்தில் 2 வது இடமாக இங்கு அமைந்துள்ளது.

கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்திரகுப்தர், மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என நம்பப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக கருதப்படுவதால், அன்று அவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தினத்தில் அவரை தரிசித்தால் மனிதர்களின் கர்மவினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது.



அந்த வகையில், திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு யாகம் துவங்கப்பட்டு செய்து சித்திரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது.



இந்த விழாவைக் காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் திரண்டனர். இவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். சித்திரகுப்தரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 4 ஆயிரம் கிலோ அரிசி கொண்டு உணவு தயார் செய்து பரிமாறப்பட்டது.

Newsletter

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...