தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

துடியலூர் அடுத்த தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தாளியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூரில் அருள்மிகு மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கியது.

தொடக்க விழாவில் கணபதி ஹோமம், பூச்சாட்டுதல், கொடி ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பொன்னூத்து, அனுவாவி, மருதமலை ஆகிய திருக்கோயில்களில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், சக்தி கரகம் ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், அம்மனுக்கு வாஸ்து, புஷ்ப மற்றும் மலர் அலங்கார பூஜைகள், விளக்கு பூஜை நடைபெற்றன.

தொடர்ந்து நேற்றைய தினம் குண்டம் கண் திறப்பு, கரும்பு வெட்டுதல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

இதில் அம்மனுக்கு வெண்ணைய் சாற்றி, உருகி வழிந்ததும், பூச்செண்டை குண்டத்தில் உருட்டி, பூசாரி, சக்தி கரகம், துணை கரகங்கள், அணிக்கூடை, வேல் ஏந்திய பக்தர்கள், ஊர் பெரியவர்கள், பூக்குண்டத்தில் முதலில் இறங்கினர்.



தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து பக்தர்களும் ஒருவர் பின் ஒருவராக பூ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...