கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்துக..! - எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களில் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரிகள், கண்டிப்பானவராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் கனிவானவராகவும் இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களை மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் நியமிக்க வேண்டும் என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன.

18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவர்கள் வளரும் சூழ்நிலையால்தான் குற்றங்கள் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, அவர்களை தனியாக தங்க வைத்து, மனதை நல்வழியில் செலுத்த பயிற்சி தருவதே சிறார் கூர்நோக்கு இல்லங்களின் நோக்கம்.

ஆனால், தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களிலிருந்து, சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து 12 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சீர்திருத்தப் பள்ளியாக செயல்பட வேண்டிய கூர்நோக்கு இல்லங்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை சுகாதாரமற்ற சூழ்நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இப்படி குழந்தைகள் வாழ முடியாத அளவுக்கு மோசமான சூழல் இருப்பதால்தான் சிறார்கள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. முதலமைச்சரும், அமைச்சர்களும் சிறார் கூர்நோக்கு இல்லங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரமான, சத்தான உணவு, போதிய இட வசதி தேவையான உடைகள், சுத்தமான கழிவறைகள், குளியல் வசதி, யோகா, உடற்பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கூர்நோக்கு இல்லங்களில் பொறுப்பாளராக இருக்கும் அதிகாரிகள், கண்டிப்பானவராக மட்டுமல்லாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் கனிவானவராகவும் இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர்களை மட்டுமே கூர்நோக்கு இல்லங்களில் நியமிக்க வேண்டும்.

ஏனெனில், குழந்தைகள்தான் நம் நாட்டின் எதிர்காலம். அவர்கள் தான் நாட்டின் செல்வங்கள். இதனை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களையும் மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...