பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசால் நடைபெற்று வந்த தடுப்பணை கட்டும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் பேசி வருவதாகவும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும், அவர் வந்த பின்னரே இது குறித்து பேச முடியும் என தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்விற்கு விலக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

தங்களுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. சட்டமன்றத்தில் பலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தகுதி தேர்விற்கு கட் ஆப் மதிப்பெண் வைத்திருப்பது பாதிப்பு என்ற கருத்து குறித்து பரீசிலனை செய்யப்படும் என அவர் கூறினார்.

மேலும், பள்ளி மாணவர்களின் மனதை அமைதிப்படுத்த யோகா வகுப்பு கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும், முதலமைச்சரின் அனுமதி பெற்று அதனை செயல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியானது தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், பிரதமரிடம் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், நீதிமன்ற உத்திரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.

இரட்டை இலை சின்னம் தங்களிடம் இருக்கிறது, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என கூற ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமையில்லை எனவும், ஜெயலலிதாவால்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது எனவும் தேரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...