சம்பளம் கொடுக்க மறுக்கும் தனியார் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சம்மளம் கொடுக்க மறுக்கும் தனியார் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்றுத் தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் சி.ஆறுமுகம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மேட்டுப்பாளையம் பகுதி உக்கான் நகரில் வசிக்கும் ராஜன் என்பவரின் மகள்களான பிரபா, பிரித்திகா, பிரின்சிகா ஆகிய மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாரதா டெரி டவல்ஸ் ஆலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அந்த ஆலையின் விடுதியில் தங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் காரணமாக ஆலையின் தங்கும் விடுதியிலேயே தங்கி வந்தனர்.

அந்த தங்கும் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், உணவு சரியாக கொடுக்காததாலும் இவர்களால் அங்கு தங்கி வேலை செய்ய முடியவில்லை. அதனால் வேலையை விட்டு நின்றுவிட்டார்கள்.

இதனால் அந்த ஆலை நிர்வாகம் இவர்கள் வேலை செய்ததற்கான சம்பளத்தை இன்று வரை வழங்கவில்லை. மேலும், இவர்களைப் போலவே 800க்கும் மேற்பட்ட 15 முதல் 16 வயது வரை உள்ள பெண்கள் சட்டத்திற்கு புறம்பாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மேற்கண்ட நிறுவனத்தின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு பெண்களுக்கு உரிய சம்பளம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...