பணியிடமாற்றம் ஆகும் அதிகாரிக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்த மக்கள்


கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் சாலைகளில் வசித்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வீட்டு மனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் இவர்கள் மனு அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக்கும், மாவட்ட வருவாய் அலுவலரான கிருஸ்துராஜும் நேரில் சென்று அம்மக்களின் நிலையை பார்த்து அவர்களில் 18 பேருக்கு இடிகரை பகுதியில் பட்டா வழங்கினர். இதில், தற்போது குடியிருப்பு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜும் புதன்கிழமை பணியிடமாற்றம் ஆக இருக்கிறார்.

இதனையொட்டி கிருஸ்துராஜுக்கு குறவர் இன மக்கள் தாங்கள் செய்த அழங்கார கூடைகளுடன் பூங்கொத்தை கொடுத்து நன்றி செலுத்தியதோடு, அவரை மீண்டும் கோவையிலேயே பணிமேற்கொள்ள வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...