உதகையில் கோடை சீசன் தொடக்கம் - வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்!

உதகையில் கோடை சீசனை முன்னிட்டு 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, குன்னூர் - பர்லியார் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: உதகையில் கோடை சீசனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

இதனையடுத்து உதகையில் போக்குவரத்தை முறைப்படுத்துவது, அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அம்ரித், காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர், விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உணவு விடுதிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோடை சீசன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.



கோடை சீசன் முடியும் வரை உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலைகள் ஒரு வழி பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.



இதனை அடுத்து உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்.

மேலும் கன ரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கோடை சீசனுக்காக காந்தல், ஆவின் மைதானங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, பேருந்து சேவை தொடங்கி இருப்பதாக கூறிய அவர், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...