கோவை - அவினாசி சாலையில் மேம்பால பணிகள்: போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கோவை - அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையத்தை தாண்டி கோல்டு வின்ஸ் பகுதி வரையிலும் 10 கி.மீட்டர் தூரம் வரை மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.



கோவை: கோவை - அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு இதுவரை 280க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதனிடையே நவ இந்தியா சிக்னல், லட்சுமி மில்ஸ், எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் ஆகிய சிக்னல்களில் மட்டும் மேம்பால தூண்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

எனவே கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல், எல்.ஐ.சி.சிக்னல், அண்ணா சிலை சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது. போக்குவரத்து மாற்றத்தையொட்டி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் இருந்த பஸ் நிறுத்தம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்புகளையும் போலீசார் ஆங்காங்கே வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

போக்குவரத்து மாற்றம் காரணமாக சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதுகுறித்து மாநகர காவல் துறையினர் கூறியதாவது:- அவினாசி சாலை பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், ஜே.எம். பேக்கரி சிக்னலில் வலது புறம் திரும்பி இம்மானுவேல் சர்ச் சாலை வழியாக செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்று எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

ஓசூர் சாலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக அவினாசி சாலைக்கு வாகனங்கள் வருவது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் ரயில் நிலையம், கோர்ட்டு வளாகம் சாலையில் இருந்து காந்திபுரம், அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னல் வந்து வலதுபுறமாக திரும்பி செல்லலாம்.

நஞ்சப்பா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் யுடர்ன் செய்து பழைய மேம்பாலம் செல்லலாம். ஆடீஸ் வீதியில் இருந்து அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக மட்டுமே செல்ல முடியும்.

ஜே.எம். பேக்கரி சந்திப்பு வழியாக ஆடீஸ் வீதிக்கு செல்வது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் கலெக்டர் அலுவலகம், பழைய அஞ்சல் நிலைய சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி தடத்தில் சென்று யு டர்ன் செய்து அவினாசி சாலையை அடைந்து ஜே.எம்.பேக்கரி சிக்னலில் இடதுபுறமாக திரும்பி ஆடீஸ் வீதிக்கு செல்லலாம்.

அல்லது ஜே.எம்.பேக்கரி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி, அவினாசி சாலை, வ.உ.சி மைதானம் முன்பு இடதுபுறமாக திரும்பி தங்களது பயணத்தை தொடரலாம்.

காந்திபுரத்திலிருந்து எல்.ஐ.சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி அவினாசி சாலையை அடைய தடை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக காந்திபுரத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி, அவினாசி சாலை, அண்ணா சிலை சந்திப்பை அடைந்து வலதுபுறமாக திரும்பி ஓசூர் சாலை வழியாக செல்லலாம்.

அண்ணா சிலையிலிருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக அண்ணா சிலையிலிருந்து வலது புறமாக திரும்பி பாலசுந்தரம் சாலையை அடைந்து காந்திபுரத்துக்கு செல்லலாம். அண்ணா சிலையிலிருந்து நேரடியாக எல்.ஐ.சி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

காந்திபுரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள், டாக்டர் பாலசுந்தரம் சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பு வந்து, அவினாசி சாலையில் வலதுபுறமாக திரும்பி எல்.ஐ.சி ஜங்ஷன் நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில் பாலசுந்தரம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பாமல் நேரடியாக ஓசூர் சாலையை அடைந்து பயணத்தை தொடரலாம்.

செஞ்சிலுவை சங்க சாலையில் இருந்து ஓசூர் சாலையில் இருந்து ஓசூர் சாலையில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பி கே.ஜி.திரையரங்கு ஜங்ஷன் வழியாக செல்லலாம். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...