ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை அடித்து கொலை செய்த மகன் - பரபரப்பு!

ஊத்துக்குளி அருகே கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதியின் மகன் கார்த்தி, நேற்றிரவு தனது தாய், தந்தையை இரும்பு குழாயால் அடித்து கொலை செய்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளியான கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தாய், தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி - ரேணுகாதேவி தம்பதி. இவர்களுக்கு 21 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளார். கார்த்திக் ஜெ.சி.பி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில் இன்று காலை கிணற்றுக்குள் இருந்து கார்த்தி கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தனது தாய் மற்றும் தந்தையை தாக்கிவிட்டு ஜே.சி.பி பேட்டரிகளை திருட முயன்றதாகவும், அதனை தடுக்க முயன்ற தன்னை, கிணற்றுக்குள் தள்ளி விட்டு சென்றதாக கூறியுள்ளார்.



இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேணுகாதேவி பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும், கிருஷ்ணமூர்த்தி படுகாயங்களுடன் இருந்துள்ளனர். பின்னர் உடனடியாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திக் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர், மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரே இரும்பு குழாயால் தனது தாய், தந்தையை அடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட மகன், தாய், தந்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...